ஜகாத் விநியோகம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…

முஆத் இப்னு ஜபல் அறிவு மேம்பாட்டு மையம் முன்னெடுத்துள்ள மற்றுமொரு முக்கியமான கடமை, எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த நலிவுற்ற, ஜகாத் பெற தகுதியுடைய இஸ்லாமிய குடும்பங்களுக்கு, தங்களுக்கு கடமையாகியுள்ள ஜகாத் தொகையை பங்கீட்டு வழங்குவது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜகாத் கொடுப்பதும் ஒன்றாகும் (வசதி படைத்தவர்களுக்கு மட்டும்). அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்திக் கூறும் பெரும்பாலான இடங்களில் எல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வலியுறத்திக் கூறுகிறான்.

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜகாத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு ஜகாத் மறுப்பு கருதப்பட்டது. எனவே நாம் ஜகாத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது மிக அவசியமாகும்.

தொழுகையை நிலை நாட்டுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள், இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

தான தர்மங்களெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், இந்த ஜகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்களது உள்ளம் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்கும் உரியனவாகும். (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவற்றையும்) அறிபவன், மிக்க ஞானமுடையவன். (அல்குர்ஆன் 9:60)

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் (ஜகாத் எனும்) தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 9:103)

மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான்.
(ஃபத்ஹுல் பாரி: 3/332)

இதன் அடிப்படையில், எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சகோதரர்கள் தத்தமது ஊரில் உள்ள ஜகாத் பெற தகுதியான குடும்பங்களை இனம் கண்டு, அவர்களுடைய விவரங்களை எங்களுக்கு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவர்களால் வழங்கப்படும் ஜகாத் தொகை, இம்மையத்தின் தலைமைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப ஜகாத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, உரியவர்களுக்கு நேரடியாக இன் ஷா அல்லாஹ் வழங்கப்படும். ஜகாத் பெருபவரின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

எங்களை தொடர்பு கொள்ள – இங்கே கிளிக் செய்யவும்.